NATIONAL

மெனு ரஹ்மா வணிகர்களுக்குச் சிறப்பு தள்ளுபடி அட்டை அறிமுகம்

1 நவம்பர் 2023, 8:54 AM
மெனு ரஹ்மா வணிகர்களுக்குச் சிறப்பு தள்ளுபடி அட்டை அறிமுகம்

ஷா ஆலம், நவ.1: உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) மூலம் மெனு ரஹ்மா வணிகர்களுக்குச் சிறப்பு தள்ளுபடி அட்டையை மத்திய அரசு நாளை முதல் அறிமுகப்படுத்துகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பல்பொருள் அங்காடிகளில் மூலப் பொருட்களை வாங்குவதில் வர்த்தகர்கள் தள்ளுபடியை அனுபவிக்க இந்த ஊக்குவிப்பு உதவுகிறது என்று தற்காலிக அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி கூறினார்.

"ரஹ்மா மெனு மூலம் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வர்த்தகர்களுக்கு இது ஒரு பாராட்டுக்குரிய அடையாளமாகும்" என்று கூறினார்.

மேலும், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக நாடு முழுவதும் ரஹ்மா விற்பனைத் திட்டத்தை (பிஜேஆர்) தனது அமைச்சகம் வலுப்படுத்தும் என்று ஆர்மிசான் தெரிவித்தார்.

"நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் குறைந்தது ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாவது மலிவு விற்பனையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

"அதிக மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் முறை மூலம் மலிவு விற்பனை திட்டம் விரிவுபடுத்தப்படும்," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.