ஹாங்சோ, நவ 1- ஆசிய பாரா 2022 விளையாட்டுப் போட்டியில் 35 பதக்கங்கள் வெல்லும் இலக்கைத் தாண்டியதற்காக மலேசியா பெருமிதம் அடைந்துள்ளது.
நாட்டின் ‘சிறப்பு’ விளையாட்டு வீரர்கள் 7 தங்கம், 15 வெள்ளி, 17 வெண்கலம் என 8 போட்டிகள் மூலம் மொத்தம் 39 பதக்கங்களை வென்று இலக்கை அடைந்துள்ளனர்.
மலேசியா தடகளம் போட்டியில் 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் வென்ற நிலையில் போசியா போட்டியின் வழி 1 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்கள் கிடைத்தன.
மேலும், சைக்கிள் ஓட்டும் போட்டியில் 1 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களை மலேசியா கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து, பளு தூக்கும் போட்டியின் மூலம் 1 தங்கம் மற்றும் 1 வெண்கலத்தை விளையாட்டு வீரர்கள் பெற்று தந்தனர்.
1 தங்கம் மற்றும் 4 வெண்கலத்தை நீச்சல் போட்டியின் மூலம் மலேசியா வென்ற வேளையில் பூப்பந்து விளையாட்டு வீரர்கள் வழி 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் கிடைத்தது.
இறுதியாகப், பந்து எறிதல் (Lawn bowls) போட்டியில் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் கைப்பற்றிய மலேசியா வீல்சேர் டென்னிஸ்யில் 1 வெள்ளியை வென்றதில் நாட்டின் பதக்க இலக்கை தாண்ட விளையாட்டு வீரர்கள் உதவியுள்ளனர்.








