ஷா ஆலம், நவ 1: நேற்று ஜாலான் உலு யாம்-கோம்பாக் எனும் இடத்தில் பல்நோக்கு வாகனம் ஒன்றின் மீது மரம் விழுந்த சம்பவத்தில் அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
40 வயதுடைய அப்பெண், செலாயாங் கில் வேலை முடிந்துவிட்டு புக்கிட் செந்தோசாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது இவ் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாகத் தனது தரப்புக்கு மாலை 6.14 மணி அளவில் அழைப்பு வந்ததாகவும், கோலா குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) ஐந்து உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு மையத்தின் தலைவர் சுல்பிகர் ஜாஃபர் கூறினார்.
"சம்பவ இடத்திற்கு வந்த போது, உறுப்பினர்கள் சுமார் 12 மீட்டர் மரம் பெரோடுவா அல்சா பல்நோக்கு வாகனத்தில் மீது விழுந்துள்ளதைக் கண்டதாக அவர் தெரிவித்தார்.
"மரத்தை வெட்டி, சிக்கியவர்களை அகற்றும் பணி முடிவடைந்தது," என்று அவர் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் இரவு 7.10 மணிக்கு வெளியே எடுக்கப்பட்டு அவர் இறந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.








