NATIONAL

போதைப்பொருள் கடத்தியக் குற்றத்திற்காகத் தாய்லாந்து நாட்டவர் உட்பட 8 பேர் கைது

31 அக்டோபர் 2023, 10:05 AM
போதைப்பொருள் கடத்தியக் குற்றத்திற்காகத் தாய்லாந்து நாட்டவர் உட்பட 8 பேர் கைது

கோத்தா பாரு, அக் 31: அக்டோபர் 25 அன்று கிளந்தானில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து சோதனைகளில் தாய்லாந்து நாட்டவர் உட்பட 8 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர் மற்றும் RM17.2 மில்லியன் மதிப்புள்ள 521 கிலோகிராம் சியாபுவை பறிமுதல் செய்தனர்.

ஜேஎஸ்ஜேஎன் புக்கிட் அமான், ஜே எஸ் ஜே என் கிளந்தானுடன் இணைந்து நடத்திய சோதனையில், மூன்று வாகனங்களில் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டதாகப் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை (ஜேஎஸ்ஜேஎன்) இயக்குநர் டத்தோ முகமட் கமருடின் முகமட் டின் தெரிவித்தார்.

"இந்தச் சோதனையின் போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் உள்ளூர் சந்தைக்கான விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 20 முதல் 54 வயதுடைய எட்டு சந்தேக நபர்கள் அதாவது ஏழு உள்ளூர் ஆண்கள் மற்றும் ஒரு தாய்லாந்து நபர் கைது செய்யப்பட்டனர்.

"இந்த சிண்டிகேட் பயன்படுத்தும் முறையானது, அண்டை நாடுகளில் இருந்து போதைப் பொருட்களை உள்ளூர் சந்தைக்குக் குறிப்பாகக் கிள்ளான் பள்ளத்தாக்கில் விநியோகிப்பதற்கு சாலை வழியாக கடத்துவதாகும்," என்று அவர் இங்குள்ள கிளந்தான் காவல் படை தலைமையகத்தில் (IPK) செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சம்பந்தப்பட்ட சிண்டிகேட் கடந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில் செயலில் இருந்ததாக நம்பப்படுகிறது.

"குற்றவியல் பதிவு சோதனையில் ஐந்து சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்களின் கடந்தகாலப் பதிவைக் கொண்டிருப்பதைக் கண்டறியப்பட்டது. RM309,000 மதிப்புள்ள ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, போதைப்பொருள் உட்பட மொத்த பறிமுதல் மதிப்பு RM17.5 மில்லியன் ஆகும்," என்று அவர் கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்க பட்டதாகவும், விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் அக்டோபர் 26 முதல் நவம்பர் 1 வரை ஏழு நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.