ஷா ஆலம், அக் 30 - நவம்பர் 10 அன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் டத்தோ மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் சிலாங்கூர் பட்ஜெட் 2024 தாக்கல்
செய்யப்படும். அதன் விளக்கக்காட்சியை மாலை 3 மணிக்கு மீடியா சிலாங்கூர் முகநூல்
மூலம் நேரலையில் பார்க்கலாம்
இந்த நிகழ்வைச் சிலாங்கூர்கினி போர்டலில் மூன்று பதிப்புகளில் (selangorkini.my)
காண முடியும். அவை மெண்டரின் (selangorkini.my/zh-hans/) மற்றும் தமிழ்
(selangorkini.my/ta/). ஆகும். மேலும்,
ஆங்கிலப் பதிப்பை selangorjournal.my என்ற இணைப்பின் மூலம் அணுகலாம்
சுவாரஸ்யமான உள்ளடக்கம் மற்றும் முக்கிய திட்டங்கள் பற்றிய விரைவான தகவல்
மற்றும் இன்போ கிராபிக்ஸ் ஆகியவை
மாநில அரசு ஊடகங்களில் வெளியிடப்படும்
பட்ஜெட் சிலாங்கூர் 2024 பதிப்பு அடங்கிய சிலாங்கூர்கினி நாளிதழ்
நவம்பர் 11 அன்று விநியோகிக்கப்படும்.








