ஷா ஆலம், அக் 30 : இன்று பிற்பகல் 5 மணி வரை சிலாங்கூரில் உள்ள 6 மாவட்டங்களில்
இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று
கணிக்கப்பட்டுள்ளது.
அவை சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங்
மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் ஆகும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்
துறை (மெட்மலேசியா) முகநூலில் தெரிவித்துள்ளது.
இதே வானிலைதான் கோலாலம்பூர், பேராக், ஜொகூர், திரங்கானு, பகாங், சரவாக்
மற்றும் சபா மாநிலங்களிலும் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம்
மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது
அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள்
வழங்கப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால
எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள்
http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது
myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.








