NATIONAL

தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் தொழில்நுட்ப சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும்! அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

30 அக்டோபர் 2023, 6:13 AM
தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் தொழில்நுட்ப சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும்! அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

கோலாலம்பூர் அக் 30 - நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிவியல் தொழில்நுட்ப சிந்தனையை இப்போதே ஊக்குவிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பத்தை நோக்கி இன்று உலகம் அதிவேகத்தில் முன்னேறி வருகிறது.

இதில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பின்தங்கி விடாமல் இருக்க இப்போதே அவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப சிந்தனையைப் போதிக்க வேண்டும் என்றார்.

பல அனைத்துலக அறிவியல் புத்தாக்க போட்டிகளில் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் சாதனைகள் என்னை வியக்க வைக்கிறது என்று தெலுக் இந்தான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிரபல வழக்குரைஞருமான எம். மனோகரன் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட மலேசிய முத்தமிழ் சங்கத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.