NATIONAL

கோல குபு  பாரு சாலையில் கோர விபத்து- மூவர் பரிதாப மரணம்

26 அக்டோபர் 2023, 9:28 AM
கோல குபு  பாரு சாலையில் கோர விபத்து- மூவர் பரிதாப மரணம்

கோலாலம்பூர், அக் 26 -  ரவாங்- கோல குபு பாரு சாலையில்  செரண்டா கோல்ஃப் ரிசார்ட் அருகே இன்று காலை 11.00 மணியளவில் நிகழ்ந்த  இரு கார்கள் சம்பந்தப்பட்ட  கோர விபத்தில்   இரு ஆடவர்களும்  ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்த வேளையில் மேலும்  ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த விபத்தில் பெரேடுவா அக்ஸியா காரும் டோயோட்டா அவான்ஸா காரும் சம்பந்தப்பட்டிருந்ததாக  சிலாங்கூர் மாநில  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.

இந்த விபத்தில் பெரேடுவா அக்ஸியா காரின் ஓட்டுநரும் பயணியும் உயிரிழந்த வேளையில் டோயோட்டா அவான்ஸா காரிலிருந்த ஆடவர் உயிரிழந்ததோடு பெண்மணி ஒருவர் படுகாயங்களுக்குள்ளானார் என்று அவர் தெரிவித்தார்.

இறந்தவர்களின் உடல்கள்  பிரேத பரிசோதனைக்காக கோல குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன. மேலும் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைக்காகச்  செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பில் காலை 11.06 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக அகமது முக்லிஸ் கூறினார்.

கோல குபு பாரு மற்றும் ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து இரண்டு வாகனங்களில் 13 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறிய அவர்,   விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.