NATIONAL

ஐஸ் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு- மூடப்பட்டிருந்த பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

26 அக்டோபர் 2023, 3:43 AM
ஐஸ் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு- மூடப்பட்டிருந்த பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், அக் 26: ஐஸ் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மூடப்பட்டிருந்த தாமான் பெரிண்டஸ்ட்ரியன் ஜெயா, ஆரா டமன்சாரா, பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றியுள்ள பகுதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதை பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் உறுதி செய்தார். நேற்று மாலை 5.30 மணிக்கு மாசுக் குறியீட்டு அளவீடு சாதாரண அளவில் இருந்ததால் அவ்விடம் திறக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

"பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறையின் பல்நோக்கு வாகனங்கள் மூலம் அவ்வப்போது கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இரவு 10.17 மணியளவில் MERS 999 என்ற தொலைபேசி அழைப்பை பெற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு அருகில் உள்ள நிலையத்திலிருந்து 27 தீயணைப்பு வீரர்களும் உதவினர்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.