NATIONAL

காரில் தனித்து விடப்பட்ட பெண் குழந்தை பரிதாப மரணம்

25 அக்டோபர் 2023, 10:21 AM
காரில் தனித்து விடப்பட்ட பெண் குழந்தை பரிதாப மரணம்

கோல திரங்கானு, அக் 25- கோல நெருசில உள்ள பொது உயர்கல்விக்

கூடத்தில் கார் ஒன்றில் தனித்து விடப்பட்டதாக நம்பப்படும் ஒரு வயது

நான்கு மாதம் நிரம்பிய பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.30 மணியளவில் தாங்கள்

தகவலைப் பெற்றதாக கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர்

ஏசிபி அப்துல் ரஹிம் முகமது டின் கூறினார்.

சுல்தானா நுர் ஷாஹிரா மருத்துவமனையில் உடற்கூறாய்வு

மேற்கொள்ளப்பட்ட நிலையில் அக்குழந்தையின் மரணத்திற்கான

காரணத்தை கண்டறிவதற்கான மருத்துவமனையின் அறிக்கைக்காக

தாங்கள் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அந்த குழந்தையை அவரின் தந்தை நேற்று மாலை பல்கலைக்கழகத்தின்

குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க மறந்து விட்டது தொடக்க கட்ட

விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ)

பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர்

சொன்னார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.