ECONOMY

இந்திய தலைவர்களுக்கு  சித்தம் பாராட்டு

25 அக்டோபர் 2023, 9:20 AM
இந்திய தலைவர்களுக்கு  சித்தம் பாராட்டு
இந்திய தலைவர்களுக்கு  சித்தம் பாராட்டு
இந்திய தலைவர்களுக்கு  சித்தம் பாராட்டு

செய்தி ; சு. சுப்பையா

ஷா ஆலம்.அக்.25-  சிலாங்கூர் மாநில இந்தியத் தலைவர்களை சித்தம் பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கி   சிறப்பித்தது. ஏறக்குறைய 40 பேர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் டத்தோ மரியா ஹம்சா கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

சித்தம் சிலாங்கூர் மாநில துணை நிறுவனங்களில் ஒன்று. சித்தம் வழி சிலாங்கூர் இந்தியர்களை தொழில் முனைவோர்களாக உருமாற்றம் செய்வது அதன் தலையாய நோக்கமாகும். அதன் எல்லாத் திட்டங்களும் சிலாங்கூரில் உள்ள 62 இந்திய சமுதாயத் தலைவர்களை (KKI)  கொண்டு இந்நாள் வரையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நாள் வரையில் இந்தியத் தலைவர்கள் கொடுத்து வந்த பேராதரவுக்கு  நன்றி கூறும் வகையில் தற்பொழுது புதிதாக ஹிஜ்ரா தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு ஏற்றுள்ள டத்தோ மரியா இந்தியத் தலைவர்களை கௌரவித்தார்.

சிலாங்கூர் மாநில ஹிஜ்ராவின் கீழ் சித்தம் செயல்படுகிறது. சித்தாமிக்கு கெனத் சைம் தலைவராக செயல்படுகிறார்.

சித்தம் இந்தியர் நலன் கருதி உருவாக்கப் பட்டது. இந்தியர்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டி அமைக்கப் பட்டது. இதுவரையில் 2,000 பேர்களுக்கு மேல் பல்வேறு பயிற்சிகளை வழங்கியுள்ளது. வியாபாரத்தில் இந்தியர்கள் ஈடுபட வேண்டி பல தளவாடப் பொருட்களும் வழங்கி வருகின்றது.

சித்தமின் எல்லா நடவடிக்கைகளுக்கும் இந்திய சமுதாயத் தலைவர்கள், அதன் அடி மட்ட வேலைகளை செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.