NATIONAL

மலேசியாவில் 30 மாதங்களில் பணவீக்கம்  1.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது

25 அக்டோபர் 2023, 8:21 AM
மலேசியாவில் 30 மாதங்களில் பணவீக்கம்  1.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது

ஷா ஆலம், அக்.25: கடந்த செப்டம்பரில் தேசியப் பணவீக்க விகிதம் 1.9 சதவீதமாக மட்டுமே பதிவாகியுள்ளது, இது கடந்த 30 மாதங்களில் மலேசியாவில் பதிவிடப்பட்ட மிக குறுகிய அளவாகும்.

உணவு மற்றும் பானங்கள், போக்குவரத்து மற்றும் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற பல துறைகளுக்கான ``இன்டெக்ஸ்`` தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் இந்த காரணி சித்தரிக்கப்படுவதாக உள்ளூராட்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் கூறினார்.

இருப்பினும், ஆடைகள், காலணிகள், மதுபானங்கள் மற்றும் புகையிலை போன்றவை அதிகரிப்பை பதிவு செய்துள்ளன என அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் கூறினார்.

"அடிப்படையில், மிதமான பணவீக்கம் என்பது விலை மட்டங்களில் குறைவதைக் குறிக்காது, மாறாக மெதுவான விகிதத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பதைக் குறிக்கிறது.

"ஒரு நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைய 2 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் மிகவும் முக்கியமானது" என்று இன்று டேவான் ராக்யாட்டில் ஓன் அபு பக்கரின் (ஹரப்பான்-பத்து பஹாட்) கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

உற்பத்தி மற்றும் விநியோகத்தின் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய பணவியல் கொள்கைகள் மற்றும் துறைசார் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் மலேசியா கவனம் செலுத்துகிறது என்று அக்மல் மேலும் கூறினார்.

பொருளாதாரத்தில் தேவை மற்றும் வழங்கல் நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, தேசிய நலனையும் நிறைவேற்றும் வகையில் இந்தக் கொள்கையை அமல்படுத்தியதாக அவர் விளக்கினார்.

"பணவியல் கொள்கை மற்றும் துறைசார் கொள்கை ஆகியவை உற்பத்தி மற்றும் விநியோகத்தின் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும், குறிப்பாக உணவு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உதவும்" என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.