கோலாலம்பூர், அக்.25 - மலேசிய இளைஞர் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் அறக்கட்டளைக்கு 1 மில்லியன் ரிங்கிட் ஆரம்ப நிதியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த அறக்கட்டளையின் முன்மொழியப்பட்ட ஸ்தாபனமானது, முன்னாள் உறுப்பினர்களின் நலனைப் பாதுகாப்பது, அவர்களின் சேவைகள் மற்றும் செயல்களை அங்கீகரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது என மலேசிய இளைஞர் பேரவை முன்னாள் மாணவர் தலைவர் டத்தோ ஸ்ரீ ஷம்சுல் அனுவார் நசாராவினால் பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது.
நேற்றிரவு உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற மலேசிய இளைஞர் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் விருந்தில் பேசிய அவர், மாற்றத்தைக் கோரும் இளைஞர்களால் மலேசிய இளைஞர் பேரவை (MBM) நிறுவப் பட்டதை நினைவு கூர்ந்தார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ் மற்றும் அவரது துணை அமைச்சர் ஆடம் அட்லி அப்துல் ஹலீம் ஆகியோரின் தலைமையில், இளைஞர்களுக்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்க விருப்பம் இருப்பதாகவும், அவற்றில் சில நாட்டில் உள்ள இளைஞர் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப் படலாம் என்றும் அன்வார் கூறினார்.
குறிப்பாக தேசத்தின் அம்சம் மற்றும் மலேசியா மடாணியின் உன்னத விழுமியங்களை இளைஞர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை தெரிவிக்க நாடு முழுவதும் உள்ள இளைஞர் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
முன்னாள் இளைஞர் தலைவர்கள் தொழில் முனைவோர் மற்றும் வணிகத்தில் ஈடுபடுவதற்கு இடம் மற்றும் வசதிகளை வழங்க மற்ற துறைகள் மற்றும் அமைச்சகங்களின் ஒத்துழைப்பையும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
- பெர்னாமா








