NATIONAL

திவேட்  தொழில் கல்வி வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி கொள்ளுங்கள்! இந்திய மாணவர்களுக்கு அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

24 அக்டோபர் 2023, 8:28 AM
திவேட்  தொழில் கல்வி வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி கொள்ளுங்கள்! இந்திய மாணவர்களுக்கு அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

புத்ரா ஜெயா அக் 24- சிறந்த மனித மூலதனத்தை உருவாக்கும் தளமாகத் திவேட் தொழில் திறன் கல்வி விளங்குகிறது. மனிதவள அமைச்சின் கீழ் இந்த தொழில் திறன் கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தீவேட் தொழில் திறன் கல்வியை இரண்டாம் தர கல்வியாக கருதாமல் இதை பயில இந்திய மாணவர்கள் அதிக அளவில் முன் வரும்படி மனித வள அமைச்சர் வ. சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

தீவேட் தொழில் திறன் கல்வியை பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பான எதிர்க்காலம் காத்திருக்கிறது என்றார் அவர்.

இதனிடையே, ஜனவரி 2024 ஆம் ஆண்டுக்கான தீவேட் தொழில் திறன் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 2023 வரை திறந்திருக்கும்.

விண்ணப்பம் செய்ய விரும்பும் மாணவர்கள் https://mohon.tvet.gov.my/ அகப்பக்கத்தை அணுகலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.