NATIONAL

ஆக்கப்பூர்வமான நாடுகளின் பட்டியலில் மலேசியாவுக்கு இரண்டாவது இடம்

24 அக்டோபர் 2023, 7:46 AM
ஆக்கப்பூர்வமான நாடுகளின் பட்டியலில் மலேசியாவுக்கு இரண்டாவது இடம்

ஷா ஆலம், அக். 24: ஆக்கப்பூர்வமான நாடுகளின் பட்டியலில் 36 உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆசியான் நாடுகளில் சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லிஹ் காங் கூறினார்.

மலேசியா 2022 இல் 38.7 என்ற மதிப்பெண்ணுடன் இருந்த நிலையில் இவ்வாண்டு அது 40.9 ஆக அதிகரித்துள்ளது என குளோபல் இன்னோவேஷன் இன்டெக்ஸ் (ஜிஐஐ) 2023 அறிக்கையின் மூலம் அறியப்பட்டது.

"ஜிஐஐயின் கண்டுபிடிப்பு செயல்திறனை மேம்படுத்துவதற்குப் பங்களிக்கும் தரவுகளைச் சேகரிக்கும் நோக்கத்துடன் அனைத்து அமைச்சகங்களையும் உள்ளடக்கிய உலகளாவிய ஆய்வு குறியீட்டு முன்முயற்சி உள்ளீட்டு ஒருங்கிணைப்பு பட்டறை கடந்த செப்டம்பரில் நடைபெற்றது," என்று அவர் கூறினார்.

இன்று டேவான் ராக்யாட்டில் ஆர் யுனேஸ்வரன் (ஹரப்பான்-சிகாமட்) கேட்ட கேள்விக்குப் பதிலளித்த லிஹ் காங், அரசாங்கத்தால் நிதி அளிக்கப் பட்ட அறிவுசார் சொத்துரிமை மற்றும் கண்டுபிடிப்பு வணிகமயமாக்கல் கொள்கையை 2021 முதல் 2025 வரை அரசாங்கம் தீவிரப்படுத்தும் என்று கூறினார்.

"அத்திட்டம், அரசாங்க அமைச்சகங்கள், துறைகள் அல்லது ஏஜென்சிகள் வணிகமயமாக்கல் நோக்கத்திற்காக அறிவுசார் சொத்துக்களை (ஐபி) முறையாக நிர்வகிக்கவும், மேலும் நாட்டிற்கு வருமானம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கவும் உதவுகிறது" என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.