ரஃபா, அக் 23: மருத்துவ உபகரணங்கள், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஏற்றி சென்ற 14 டிரக்குகளை உள்ளடக்கிய உதவித் தொடரணிகளின் இரண்டாவது குழு ஞாயிற்றுக்கிழமை இரவு ரஃபா எல்லை வழியாக காசா பகுதிக்குள் நுழைந்தது.
முதல் தொகுதி சனிக்கிழமை காசாவிற்குள் நுழைந்தது. இதுவரை காசாவிற்கு வந்த உதவி டிரக்குகளின் எண்ணிக்கையை 34ஆக உள்ளது என பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அக்டோபர் 7 முதல் நடக்கும் சண்டையால் 1,903 குழந்தைகள் மற்றும் 1,024 பெண்கள் உட்பட குறைந்தது 4,651 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 14,245 பேர் காயமடைந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சு கூறியது.
– பெர்னாமா








