NATIONAL

குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்த எண்ணம் – மாநில அரசாங்கம்

23 அக்டோபர் 2023, 9:18 AM
குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்த எண்ணம் – மாநில அரசாங்கம்

ஷா ஆலம், அக் 23: சிலாங்கூர் அரசாங்கம் நிலையான சுற்றத்தாரைக் குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது.

பழைய விவசாய முறையை நவீன முறையில் மேம்படுத்தி வருமானம் ஈட்டவும், இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளை பராமரிப்பதற்கான செலவை ஈடுகட்டவும் கவனம் செலுத்தப்படும் என வீட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமன் ஷா கூறினார்.

"மக்கள் பாதுகாப்பாகவும், மதிக்கப்படுபவர்களாகவும், முக்கியமான சேவைகளைப் பெறுவதற்காகவும் நிலையான மற்றும் வலுவான சுற்றுப்புறத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் இன்று நகர்ப்புற நல்வாழ்வு கருத்தரங்கின் தொடக்கத்தில் கூறினார்.

சிலாங்கூர் வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் வாரியம் (LPHS) ஏற்பாடு செய்திருந்த தொடக்க நிகழ்ச்சி இங்குள்ள மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. எல்பிஎச்எஸ் நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் ஜுஹாரி அஹ்மட் உடனிருந்தார்.

குறிப்பாக ரூமா சிலாங்கோர் கூ  மூலம் மக்களுக்கு வசதியான மற்றும் தரமான வீடுகளை வழங்குவதற்கான பல்வேறு முயற்சிகளை மாநில அரசு செயல்படுத்தி உள்ளதாக போர்ஹான் மேலும் கூறினார்.

சிலாங்கூர் நிர்வாகம் வீட்டுவசதியை தங்குமிடமாக மட்டும் பார்க்காமல், அது ஒரு குடும்பத்தின் கனவுகளையும் எதிர்காலத்தையும் நிறைவு செய்கிறது என்று அவர் விளக்கினார்.

"சிறந்த வீடடுகளை வடிவமைக்கும் முயற்சியில் பொது, தனியார் துறைகள் மற்றும் அனைத்து குழுக்களின் தகவல் மற்றும் ஒத்துழைப்பை நான் வரவேற்கிறேன்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.