ஷா ஆலம், அக் 20 - இன்று காலை 9.00 மணி நிலவரப்படி காற்றின் தரம்
ஆரோக்கியமற்ற நிலையில் பதிவான ஒரே இடமாக கிள்ளான்
விளங்குகிறது. அந்நகரில் ஐ.பி.யு. எனப்படும் காற்று மாசுக் குறியிடு
156ஆகப் பதிவானது.
நாட்டிலுள்ள 48 இடங்களில் காற்றின் தரம் மிதமானதாகவும் (51-100
ஐ.பி.யு.) 19 இடங்களில் சிறப்பானதாகவும் பதிவாகியிருந்ததாக மலேசிய
காற்றுத் தரக் குறியீடு மேலாண்மை முறை தனது அகப்பக்கத்தில்
கூறியுள்ளது.
சுழியம் முதல் 50 வரையிலான ஐ.பி.யு. குறியீடு சிறப்பதானதாகவும் 51
முதல் 100 வரையிலான குறியீடு மிதமானதாகவும் 100 முதல் 200
வரையிலானக் குறியீடு ஆரோக்கியமற்றதாகவும் 201 முதல் 300
வரையிலானக் குறியீடு மிகவும் ஆரோக்கியமற்றதாகவும் 300க்கும்
மேற்பட்ட ஐ.பி.யு. குறியீடு ஆபத்தானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும்
வறட்சி நிலை காரணமாக ஆசியானின் தென் பகுதியில் ஜூன் மாதம்
முதல் அக்டோபர் வரை கடுமையான புகைமூட்டப் பிரச்சனை ஏற்படும்
என எச்சரிக்கப்பட்டுள்ளது.








