NATIONAL

கிள்ளானில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டு அளவு தொடர்ந்து பதிவு

19 அக்டோபர் 2023, 2:55 AM
கிள்ளானில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டு அளவு தொடர்ந்து பதிவு

கோலாலம்பூர், அக் 19: இன்று காலை 9 மணி நிலவரப்படி, கிள்ளான் ஆரோக்கியமற்ற

காற்று மாசுக் குறியீட்டு அளவை (154) தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.

மொத்தம் 51 பகுதிகள் மிதமான காற்று மாசுக் குறியீட்டு

அளவீடுகளைப் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில் 16 பகுதிகள் நல்ல

அளவீடுகளைப் பதிவு செய்துள்ளன என சுற்றுச்சூழல் துறையின் மலேசிய

காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.

0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100

மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும்

ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300

மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.