கோலாலம்பூர், அக் 19: நேற்று பிற்பகல் 5 மணி நிலவரப்படி தீபகற்பத்தில் உள்ள எட்டு
பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டு (ஐபியு) அளவீடுகள்
பதிவாகியுள்ளன. அதில் கிள்ளான் அதிகபட்ச 159 ஆகப் பதிவு செய்துள்ளது.
மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS), சுற்றுச்சூழல்
துறையின் இணையதளத்தின்படி,
ஆரோக்கியமற்ற ஐபியு அளவீடுகளைப் பதிவு செய்த மற்றொரு ஏழு பகுதிகளில்
பெட்டாலிங் ஜெயா (154), ஜோஹான் செத்தியா (153), ஷா ஆலம் (138), பந்திங் (133),
செராஸ் (146), பத்து மூடா (137) மற்றும் தங்காக், ஜொகூர் (116) ஆகும் என மலேசிய
காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.
மொத்தம் 45 பகுதிகள் மிதமான காற்று மாசுக் குறியீட்டு
அளவீடுகளைப் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில் 15 பகுதிகள் நல்ல
அளவீடுகளைப் பதிவு செய்துள்ளன.
0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100
மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும்
ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300
மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.








