NATIONAL

ஆறு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டு அளவீடுகள் பதிவு

18 அக்டோபர் 2023, 4:26 AM
ஆறு பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டு அளவீடுகள் பதிவு

ஷா ஆலம், அக் 18: இன்று காலை 11 மணி நிலவரப்படி, ஆறு பகுதிகளில்

ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டு அளவீடுகள் பதிவாகியுள்ளன. அதில் கிள்ளான்

157ஆகப் பதிவு செய்துள்ளது.

மாசுக் குறியீட்டு அளவீடுகள் 100க்கு மேல் பதிவு செய்த பகுதிகள் பெட்டாலிங் ஜெயா

(152), ஜோஹான் செத்தியா, தங்காக், ஜொகூர் (137), செராஸ் (114) ) மற்றும் பத்து

மூடா, கோலாலம்பூர் (102) ஆகியவை ஆகும் என சுற்றுச்சூழல் துறையால் இயக்கப்படும்

மலேசிய காற்று மாசுக் குறியீடு மேலாண்மை அமைப்பு அறிவித்தது.

மொத்தம் 50 பகுதிகள் மிதமான காற்று மாசுக் குறியீட்டு

அளவீடுகளைப் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில் 12 பகுதிகள் நல்ல

அளவீடுகளைப் பதிவு செய்துள்ளன.

0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100

மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும்

ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300

மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.