NATIONAL

நாட்டில் 5,873 5G தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன - ஃபஹ்மி பட்சில்

9 அக்டோபர் 2023, 8:49 AM
நாட்டில் 5,873 5G தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன  -  ஃபஹ்மி பட்சில்

கோலாலம்பூர், அக்டோபர் 9 – நாட்டில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மொத்தம் 5,873 5G தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன  அதாவது மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதன் சேவை இப்போது 70.2 சதவீதத்தை எட்டியுள்ளது.

மேலும், 2.49 மில்லியன் 5G சேவை சந்தாக்கள் இன்று வரை பதிவு செய்யப்பட்டுள்ளன (7.4 சதவீதம்) என தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி பட்சில் தெரிவித்தார்

"இதுவரை, ஆறு மொபைல் சேவை வழங்குநர்கள் 5G வணிகத் திட்டங்களை வழங்கியுள்ளனர். அவை ``CelcomDigi, Maxis, U Mobile, Telekom Malaysia, YTL Communications மற்றும் Yoodo," என்று அவர் இன்று டேவான் ராக்யாட்டின் அமர்வில் ஒரு கேள்வி பதிலளித்தப்போது கூறினார்.

5ஜி நெட்வொர்க் சேவைகள் குறித்து பாரிசான் நேஷனலின் தித்திவாங்சா எம்பி டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி கேட்ட கேள்விக்கு ஃபஹ்மி இவ்வாறு பதிலளித்தார்.

நாடு முழுவதும் 7,509 5ஜி தளங்களை உருவாக்கும் இலக்குடன் டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் மூலம் 5ஜி நெட்வொர்க்கை செயல்படுத்தி வருவதாக ஃபஹ்மி கூறினார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.