NATIONAL

காற்று மாசு குறியீடு 200ஐத் தாண்டினால் பள்ளிகள் மூடப்படும்

7 அக்டோபர் 2023, 11:46 AM
காற்று மாசு குறியீடு 200ஐத் தாண்டினால் பள்ளிகள் மூடப்படும்

ஜார்ஜ் டவுன், அக் 7: காற்று மாசுக் குறியீடு 200ஐத் தாண்டினால், மாவட்டக் கல்வி அலுவலகத்தின் (பிபிடி) ஒப்புதலுக்காக காத்திருக்காமல் பள்ளிகளை மூடலாம் என்று கல்வி அமைச்சகம் (கேபிஎம்) தெரிவித்துள்ளது.

 

சுற்றுச்சூழல் துறையின் இணையதளம் மூலம் பள்ளி காற்றின் தரம் மற்றும் காற்று மாசுக் குறியீடு அளவீடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் கூறினார்.

 

" காற்று மாசுக் குறியீடு அளவீடு 100ஐத் தாண்டினால், பள்ளியில் வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. மேலும், அது 200ஐத் தாண்டினால், பள்ளி மூடப்படும். அதுமட்டுமில்லாமல், கற்றல் மற்றம் கற்பித்தல் நடவடிக்கை இணையம் வழி நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்தது.

 

"பள்ளியை மூடுவதற்குப் பிபிடியின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் பிபிடிக்குத் தெரிவிக்க வேண்டும்," என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

 

பள்ளியிலும் முகக்கவரி அணிவது ஊக்குவிக்கப்படுவதாகவும், மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

கூடுதலாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணிக்கவும், மோசமான காற்றின் தரத்தைக் கருத்தில் கொண்டு வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைக்கவும் லிம் அறிவுறுத்தினார்.

 

இன்று காலை 9 மணி நிலவரப்படி, பினாங்கில் காற்றின் தரம் நல்ல நிலையில் பதிவாகியுள்ளன என மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர் டேனியல் கூய் கூறினார்.

 

"கடந்த சில நாட்களாகப் பெய்த மழையைத் தொடர்ந்து மாநிலத்தில் புகைமூட்டம் நிலை குறைந்துள்ளதாக நான் நம்புகிறேன்.

 

"இருப்பினும், புகைமூட்டம் காரணமாகச் சுவாசச் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதா என்பதை கண்காணிக்க மாநில சுகாதாரத் துறைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்," என்று அவர் கூறினார்.

 

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.