NATIONAL

ஹலால் சான்றிதழ்களை விண்ணப்பிப்பதற்கும் புதுப்பிப்பதற்குமான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன

4 அக்டோபர் 2023, 1:00 PM
ஹலால் சான்றிதழ்களை விண்ணப்பிப்பதற்கும் புதுப்பிப்பதற்குமான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன

ஷா ஆலம்,  அக் 4: ஹலால் சான்றிதழ்களை விண்ணப்பிப்பதற்கும் புதுப்பிப்பதற்குமான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு 23 வேலை நாட்களுக்குள் கட்டாய முடிவுகள் வழங்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.

தற்போதுள்ள செயல்முறை அதிக நேரம் எடுத்துக் கொள்வதன் காரணமாகத் தொடர்ந்து பல புகார்களைப் பெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கினார்.

“ஹலால் சான்றிதழ் வழங்குவது மிகவும் தாமதமாக இருப்பதாகச் சிலர் புகார் கூறுகின்றனர். இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஹலால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

"மலேசிய ஹலால் தொழில்துறை மேம்பாட்டு கவுன்சில் விண்ணப்பக் காலத்தை 23 வேலை நாட்களாகக் குறைக்க முடிவு செய்துள்ளது," என்று போர்டல் மூலம் அவர் தெரிவித்தார்.

ஹலால் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் Bhd (HDC) உடன் இணைந்து மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாகிம்) இந்த விஷயத்தை செயல்படுத்தும் என்று அவர் விளக்கினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.