NATIONAL

சிலாங்கூர் பெவிலியன் RM1.03 மில்லியன் விற்பனை வசூலைப் பதிவு செய்தது- மாட்டா

3 அக்டோபர் 2023, 9:00 AM
சிலாங்கூர் பெவிலியன் RM1.03 மில்லியன் விற்பனை வசூலைப் பதிவு செய்தது- மாட்டா

ஷா ஆலம், அக் 3: கடந்த மாதம் மலேசிய சுற்றுலா மற்றும் சுற்றுலா முகவர்கள்

சங்கம் (மாட்டா) 2023 கண்காட்சியில் பங்கேற்றதன் மூலம் சிலாங்கூர் பெவிலியன்

RM1.03 மில்லியன் விற்பனை வசூலைப் பதிவு செய்தது.

செப்டம்பர் 1 முதல் நடைபெற்ற கண்காட்சியின் மூன்று நாட்களில் 80,000க்கும்

மேற்பட்ட நபர்கள் பெவிலியனைப் பார்வையிட்டதாகப் பதிவாகியுள்ளன என சுற்றுலா

சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ருல் ஷா முகமட் கூறினார்.

"ஜிஎல் ப்ளே செயலி மூலம் சிலாங்கூர் சுற்றுலா இந்த முறை பெரிய தாக்கத்தை

ஏற்படுத்தியது.

"விடுமுறையைக் கழிக்க வேண்டுமா? சிலாங்கூரை முதலில் சுற்றி பாருங்கள்!" என்ற

பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை அவர் கூறினார்.

இதற்கிடையில், மாநிலம் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களை உள்ளடக்கிய

உள்நாட்டு சுற்றுலாவின் வளர்ச்சியைத் அதிகரிப்பதற்குக் கண்காட்சி பல புதிய

உத்திகளைக் கையாண்டது என மாட்டா தலைவர் நைஜெல் வோங் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.