NATIONAL

ஐந்து பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டின் (API) அளவீடு பதிவாகியுள்ளன

2 அக்டோபர் 2023, 3:43 AM
ஐந்து பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டின் (API) அளவீடு பதிவாகியுள்ளன

ஷா ஆலம்,  அக் 2: இன்று காலை 9 மணி நிலவரப்படி, சிலாங்கூரில் உள்ள ஐந்து பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன.

ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா மற்றும் பந்திங் ஆகிய இடங்களில் காற்று மாசுக் குறியீடு (API) அளவீடு 157ஆக உள்ள நிலையில் ஜோஹான் செத்தியாவில் (153) மற்றும் கிள்ளானில் (152) ஆகும் என மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையத்தளம் மூலம் தெரிவித்தது.

மேலும், புத்ராஜெயா (156) மற்றும் கோலாலம்பூரில் உள்ள இரண்டு பகுதிகளான பத்து மூடா (153) மற்றும் செராஸ் (164) ஆகிய இடங்கள் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவைப் பதிவு செய்துள்ளன.

0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100 மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும் ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300 மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.

சமீபத்திய காற்று மாசுக் குறியீட்டின் (API) அளவீட்டின் நிலையை அறிய மக்கள் APIMS இணையதளத்தைப் பார்வையிடலாம்.

கடந்த மே மாதம், வானிலை மற்றும் காலநிலை அதிகாரிகள், இந்த ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் தெற்கு ஆசியான் பிராந்தியத்தில் மிகவும் கடுமையான முகைமூட்டம் நிகழும் என எச்சரித்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.