ஷா ஆலம், செப் 30- சிலாங்கூரில் நான்கு மாவட்டங்களில் இன்று இரவு 7.00 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களோடு கோலாலம்பூரிலும் இந்நிலை நீடிக்கும் என்று அம்மையம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
இதே வானிலை பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் சபாவின் பல பகுதிகளில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு அதிகமாக இருக்கும் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்த இடியுடன் கூடிய மழை தொடர்பான எச்சரிக்கை என்பது ஆறு மணிநேரத்திற்கும் மேற்போகாத ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும்.
வானிலை தொடர்பான நம்பகமானத் தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
ALAM SEKITAR & CUACA
சிலாங்கூரின் நான்கு மாவட்டங்களில் இன்றிரவு 7.00 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்
30 செப்டெம்பர் 2023, 9:10 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
29 ஜூலை 2025

alam-sekitar & cuaca
'துருன் அன்வர்' போராட்டக்காரர்கள் கோலாலம்பூர் வீதிகளில் 20 டன் குப்பையை விட்டுச் சென்றார்கள்! ஙா கோர் மிங்
n.pakiya
28 ஜூலை 2025

national
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
22 ஜூலை 2025

alam sekitar & cuaca
காட்டு தீ விபத்திற்கு மனித நடவடிக்கைகளே காரணம்
n.pakiya
21 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?



