NATIONAL

டுவேட்நௌ க்யூஆர் (Duitnow QR) பயன்படுத்துவதற்கு எந்தவொரு கட்டணமும் விதிக்கப்படாது - மே பேங்க்

29 செப்டெம்பர் 2023, 8:48 AM
டுவேட்நௌ க்யூஆர் (Duitnow QR) பயன்படுத்துவதற்கு எந்தவொரு கட்டணமும் விதிக்கப்படாது - மே பேங்க்

கோலாலம்பூர், செப் 29: டுவேட் நௌ க்யூஆர் (Duitnow QR) பயன்படுத்துவதற்கு எந்த ஒரு கட்டணமும் விதிக்கப்படாது என்றும் இது மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்றும் மலாயன் பேங்கிங் பிஎச்டி (மே பேங்க்) இன்று தெரிவித்துள்ளது.

"அனைத்து வணிகர்களும் டுவேட் நௌ க்யூஆர் பேமெண்ட்டுகளை எந்தவொரு கட்டணமின்றி பெறலாம்" என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் வர்த்தகர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது.

நவம்பர் 1 ஆம் தேதியுடன் வணிகர்களுக்கான நான்கு ஆண்டு வணிகத் தள்ளுபடி விகிதம் (MDR) முடிவடையும் என்று டுவேட்  நௌ க்யூஆர் குறியீட்டை இயக்கும் ``Payments Network Malaysia Sdn Bhd (PayNet)`` சமீபத்தில் தெளிவுபடுத்தியது.

இப்போதைக்கு, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் வணிகத் தள்ளுபடி விகிதத்திற்கு உட்பட்டவையாகும்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.