ECONOMY

வேலை வாய்ப்பு கண்காட்சி மூலம் 158,792 பேருக்கு வேலை வாய்ப்பு- அமைச்சர் சிவகுமார் தகவல்

28 செப்டெம்பர் 2023, 4:17 AM
வேலை வாய்ப்பு கண்காட்சி மூலம் 158,792 பேருக்கு வேலை வாய்ப்பு- அமைச்சர் சிவகுமார் தகவல்

புத்ரா ஜெயா செப் 28- நோய்த் தொற்று காலத்தில் வேலைகளை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சு நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

வேலை தேடுதல் மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறையை எளிதாக்க  MYFutureJobs திட்டம் உதவுகிறது. இது மலேசியாவின் அனைத்து வேலை தேடுபவர்கள் மற்றும் முதலாளிகளுக்கான தேசிய  வேலை வாய்ப்பு அகப்பக்கமாகும்.  இந்த அகப்பக்கம் வேலை தேடுவோரின்  திறன்களின் அடிப்படையில் மிகவும் துல்லியமான வேலைகளை பெற்றுத் தருகிறது.

சொக்சோ நிறுவனத்தின் மூலம் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு கண்காட்சியில் வழி இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரத்து 792 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

நாட்டில் வேலையில்லா பிரச்சனைக்கு தீர்வு காண மனித வள அமைச்சின் MYFutureJobs மக்களுக்கு பெரிதும் உதவுகிறது என்று அவர் சொன்னார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.