ECONOMY

அரசாங்கம் ``உச்சவிலை`` (windfall)மீதான வரியை மறுஆய்வு செய்து வருகிறது

19 செப்டெம்பர் 2023, 1:14 PM
அரசாங்கம் ``உச்சவிலை`` (windfall)மீதான வரியை மறுஆய்வு செய்து வருகிறது

கோலாலம்பூர், செப் 19 - மலேசியா செம்பனைத் தொழிலின் மீது ஏற்கனவே விதித்துள்ள `உச்சவிலை`` (windfall) வரியை மறுஆய்வு செய்து வருவதாகவும், அடுத்த ஆண்டு அது நிறைவு செய்யப்படும் என நம்புவதாகவும், பெருந்தோட்ட மற்றும் பொருட்கள் அமைச்சர் ஃபதில்லா யூசோப் நேற்று தெரிவித்தார்.

தோட்டக்காரர்கள் பல ஆண்டுகளாக அரசாங்கம் அந்த  வரி விகிதத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் மற்றும் விண்ட்ஃபால் லாப வரிக்கான வரம்பை நீக்க கோரியுள்ளனர்.

மலேசியா தீபகற்ப மலேசியாவில் டன்னுக்கு RM3,000க்கு மேல் பாமாயில் விலையில் 3 சதவிகிதம் மற்றும் சபா மற்றும் சரவாக்கில் -மாநிலங்களில் டன்னுக்கு RM3,500க்கு மேல் 3 சதவிகிதம் விண்ட்ஃபால் வரியை விதிக்கிறது.  அம் மாநிலங்கள் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தியில் உள்ளன. 

தொழில்துறைக்குச் "சுமையாக" இருக்கும் வரிகள் குறித்த நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஃபதில்லா, மறுஆய்வு பற்றிய விவரங்களை வழங்கவில்லை. இது குறித்து நிதி அமைச்சகத்துடன் விவாதிக்கப்படும் என்றார்.

- ராய்ட்டர்ஸ்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.