ECONOMY

தஞ்சோங் சிப்பாட், தாமான் முத்தியாரா ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்திற்கு அமைச்சர் சிவகுமார் வெ.50,000 மானியம்

10 செப்டெம்பர் 2023, 8:18 AM
தஞ்சோங் சிப்பாட், தாமான் முத்தியாரா ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்திற்கு அமைச்சர் சிவகுமார் வெ.50,000 மானியம்

தஞ்சோங் சிப்பாட், செப் 10-கோல லங்காட் மாவட்டத்தில் உள்ள தஞ்சோங் சிப்பாட்   ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலய கட்டட திருப்பணிக்கு 50,000 வெள்ளி  மானியம் வழங்குவதாக மனித வள அமைச்சர் சிவகுமார் நேற்று அறிவித்தார்.

நேற்று நடைபெற்ற தஞ்சோங் சிப்பாட்  ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தின் ஆவணி

மாத திருவிழாவில் மனித வள அமைச்சர் சிவகுமார் கலந்து சிறப்பித்தார்.

ஆலயத் தலைவர் லெட்சுமணன்,  செயலாளர் முத்தழகன், கட்டடக் குழு தலைவர்  வேலாயுதம் ஆகியோர் தலைமையில் ஆலயத் திருவிழா மிகவும் விமரிசையாக  நடைபெற்றது.

ஒரு ஏக்கர் நிலத்தில் அமைந்திருக்கும் இந்த  ஆலயம் தற்போது ஆறு லட்சம் வெள்ளியில்

திருப்பணி செய்யப்பட்டு வருகிறது.

75 விழுக்காடு திருப்பணி வேலைகள்  முடிவடைந்த நிலையில் இன்னும் எஞ்சிய

வேலைகள் முடிவடைய நிதி  தேவைப்படுவதாக ஆலயச் செயலாளர்  முத்தழகன் தெரிவித்தார்.

இந்த ஆலயத்தின் திருப்பணிக்கு உதவும்வகையில் தமது சார்பில் 50,000 வெள்ளியை

வழங்குவதாக மனிதவள அமைச்சர் சிவகுமார்  அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.