கோலாலம்பூர், செப்.3 - பத்தாங் காளி, கோ தோங் ஜெயா, கோலா குபு பாரு மற்றும் செராண்டா ஆகிய பகுதிகளில் நேற்றிரவு புலி சுற்றித் திரிந்ததாக 4 புகார்கள் கிடைத்துள்ளதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
உலு சிலாங்கூர் துணைக் காவல் துறைத் தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ், உள்ளூர் சமூகங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதற்கான வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்கா துறைக்கு (பெர்ஹிலிட்டன்) தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
"பெர்ஹிலிதான் புலி சுற்றித் திரிவது குறித்து பல கேமராக்கள் பொருத்தி விலங்கு இருக்கும் இடத்தை அடையாளம் காண விசாரணை நடத்தி வருகிறது" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அஸ்ரி, பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது, நேற்று பத்தாங்காளியில் உள்ள பிரபல சமூக ஊடகலாளருக்கு சொந்தமான ஒரு வன தங்குமிடத்திற்கு சுற்றியுள்ள பகுதியில் விலங்குகள் உறுமுவதைப் பொதுமக்கள் பார்த்ததாகவும் கேட்டதாகவும் தெரிவித்தார்.
“விவசாயம், மலை ஏறுதல், வனப்பகுதிக்குள் நுழைதல் போன்றவற்றின் போது பொதுமக்கள் விழிப்புடன், கவனமாகவும் இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொள்கின்றனர்.
"புலி பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-60641132 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.- பெர்னாமா






