ECONOMY

சாலையில் விழுந்த மரங்களை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் விரைந்து அப்புறப்படுத்தியது

2 செப்டெம்பர் 2023, 4:41 AM
சாலையில் விழுந்த மரங்களை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் விரைந்து அப்புறப்படுத்தியது

ஷா ஆலம், செப் 2- சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் பந்தாஸ் எனப்படும் விரைவு பணிக்குழு உறுப்பினர்கள் நேற்று சுபாங் ஜெயா வட்டாரத்தில் சாலைகளில் விழுந்த மரங்களை விரைந்து வந்து  அகற்றினர்.

நேற்று காலை பெய்த மழையின் காரணமாக விழுந்த மரங்கள்  புத்ரா ஹைட்ஸ் பகுதியில் அதாவது ஜாலான் புத்ரா முர்னி 3/1 மற்றும் ஜாலான் புத்ரா பிஸ்தாரி செக்சன் 2 ஆகிய இடங்களில் சாலையை மறித்தது தொடர்பில் எம்.பி.எஸ்.ஜே. துரித நடவடிக்கை குழுவுக்கு கிடைத்த இரண்டு புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சாலையில் கிடந்த மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தைச்  சீராக்கும் பணி  உடனடியாக மேற்கொள்ளப் பட்டதாக மாநகர் மன்றம் தனது முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

ஏதேனும் புகார்கள் அல்லது அவசர நிலைகள் இருந்தால் மாநகர் மன்றத்தின் அழைப்பு மையத்தை 03-8024 7700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  குடியிருப்பாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.