ECONOMY

சிலாங்கூர் வான் கண்காட்சி- பார்வையாளர்களுக்கு இலவச பஸ் சேவை

1 செப்டெம்பர் 2023, 6:12 AM
சிலாங்கூர் வான் கண்காட்சி- பார்வையாளர்களுக்கு இலவச பஸ் சேவை

ஷா ஆலம், செப் 1 - மூன்றாவது சிலாங்கூர் வான் கண்காட்சி 2023 வரும் செப்டம்பர் 7

முதல் 9 வரை சிலாங்கூரில் உள்ள புக்கிட் ஜெலுத்தோங், ஸ்கைபார்க் ஆர்ஏசி விமானத்

தளத்தில் நடைபெறுள்ளது.

இந்த பிரசித்தி பெற்ற வருடாந்திர நிகழ்வில்  ஆறு நாடுகளைச் சேர்ந்த 117

கண்காட்சியாளர்கள் கலந்து கொள்வதோடு  சுமார் 40 விமானங்களும் காட்சிக்கு

வைக்கப்படவுள்ளன.

இந்தக் கண்காட்சியில் வர்த்தக பார்வையாளர்களுக்கு முதல் இரண்டு நாட்கள்

பிரத்தியேகமாக ஒதுக்கித் தரப்படும்.  அதேசமயம் வெள்ளிக்கிழமை மதியம் முதல்

சனிக்கிழமை வரை பொது மக்கள்  நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

இந்த மூன்று நாட்களிலும் இந்நிகழ்வுக்கு  20,000 பார்வையாளர்கள் வருகை தருவார்கள்

என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள்

நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்

கொள்ளப் படுகிறார்கள்.

கண்காட்சி நடைபெறும் இடத்தில்  வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி இல்லை என்பதோடு  ஸ்கைபார்க் அருகிலுள்ள முக்கிய  சாலைகளின் ஓரங்களில் கார்களை நிறுத்த  வேண்டாம் என்றும் ஏற்பாட்டாளர்கள்   கேட்டுக் கொள்கின்றனர்.

தனியார் வாகனத்தில் வரும்  பார்வையாளர்கள் ஸ்டேடியம் ஷா ஆலம்

அருகே, ஜெயண்ட் செக்சன் 13 பேரங்காடிக்கு அடுத்ததாக உள்ள பார்க்கிங் வசதியைப்

பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அங்கிருந்து ஸ்கைபார்க்கிற்கு பஸ் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.