ECONOMY

செந்சோசா தொகுதியில் கோலகல தேசிய தினக் கொண்டாட்டம்

1 செப்டெம்பர் 2023, 5:16 AM
செந்சோசா தொகுதியில் கோலகல தேசிய தினக் கொண்டாட்டம்

கிள்ளான், செப் 1- செந்தோசா சட்டமன்றத் தொகுதி நிலையிலான தேசிய

தினக் கொண்டாடம் நேற்று இங்குள்ள இங்குள்ள தாமான் கிளாங்

ஜெயாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில்

மிகவும் விசரிசையாக நடைபெற்ற இந்த விழாவில் மூவினங்களையும்

சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நாட்டின் மீதான

பற்றுதலை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் தேசிய கொடிகள் பொருத்தப்பட்ட 60 வாகனங்களின்

ஊர்வலம் மற்றும் குடியிருப்பாளர் சங்கங்கள், 46 அரசு சாரா அமைப்புகள்,

காவல் துறை, தீயணைப்புத் துறை, ரேலா உறுப்பினர்களின் அணிவகுப்பு

உள்ளிட்ட நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

நாடு 66வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் தொகுதியிலுள்ள அனைத்து நிலையிலான மக்களும் இந்த கொண்டாடத்தில் பங்கேற்பதை உறுதி

செய்யும் நோக்கில் இந்த நிகழ்வு   ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது.

மலேசியர்களிடையே நாட்டுப பற்றை விதைப்பதிலும் சுதந்திரத்தின்

மகத்துவத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவதிலும் இது போன்ற

கொண்டாடங்கள் பெரிதும் துணை புரியும் என்று தொகுதி சட்டமன்ற

உறுப்பினர் குணராஜ் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மலேசியா மடாணி

கோட்பாட்டிற்கு ஏற்ப நாடு சுபிட்சம் மற்றும் வளப்பத்துடன் தொடர்ந்து நீடு

நடை போடுவதற்கு இனங்களுக்கிடையிலான ஐக்கியம் மிகவும்

முக்கியமானதாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும்

தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.