ECONOMY

தேசிய தினப் பேரணியின் போது ரேலா உறுப்பினர் மயங்கி விழுந்து மரணம்

1 செப்டெம்பர் 2023, 3:21 AM
தேசிய தினப் பேரணியின் போது ரேலா உறுப்பினர் மயங்கி விழுந்து மரணம்

சிரம்பான், செப் 1 - நெகிரி செம்பிலான் மாநில அளவிலான 66 வது தேசிய தின விழாவையொட்டி இங்குள்ள டத்தாரான் மஜ்லிஸ் பண்டாரயா சிரம்பானில் நேற்று நடைபெற்ற அணிவகுப்புப் நிகழ்வின் போது மக்கள் தன்னார்வப் படை (ரேலா) உறுப்பினர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அந்த 53 வயது ரேலா உறுப்பினர் உயிரிழந்து விட்டதை நேற்று காலை 10.00 மணியளவில் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனை உறுதிப் படுத்தியதாக  சிரம்பான் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அரிபாய் தாராவே கூறினார்.

அவரின்  மரணத்திற்கு காரணம் இதயப் பிரச்சனை (கரோனரி ஆர்டரி அடைப்பு) என பிரேதப் பரிசோதனையில்  கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தகவல் தெரிந்தவர்கள் அல்லது சம்பவத்தை பார்த்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் எடி குசைனி ஷரிபுடினை 0127707282 என்ற எண்ணிலோ அல்லது சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 066033222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.