ECONOMY

தேசிய தினக் கொண்டாட்டம்-பல்லின மக்களுடன் மாமன்னர் தம்பதியர் அளவளாவினார்

31 ஆகஸ்ட் 2023, 6:06 AM
தேசிய தினக் கொண்டாட்டம்-பல்லின மக்களுடன் மாமன்னர் தம்பதியர் அளவளாவினார்

புத்ராஜெயா, ஆக 31- நட்புறவுடன் பழகும் குணத்திற்கு  உரியவர்களான மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும்  பேரரசியார்  துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா தம்பதியர் இன்று புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பல்லின மக்களுடன் அளவளாவினர்.

ஆட்சியாளர்களுக்கான மரபுகளை மீறி தன்னிச்சையாக  சுமார் ஒரு மணி நேரத்தை பொதுமக்களுடன் செலவிட்ட மாமன்னர் தம்பதியர், அவர்களுடன்  கைகுலுக்கிய தோடு அணிவகுப்பு பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் செல்ஃபி எனும் தம்படமும் எடுத்துக் கொண்டனர்.

அரச தம்பதியினர் கைகோர்த்தவாறு சதுக்கத்தில் நடந்து சென்றதோடு கொண்டாட்டத்தின் போது இசைக்கப்பட்ட ஜாலூர் ஜெமிலாங் பாடலையும் பாடிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

அல்-சுல்தான் அப்துல்லாவும் ஒரு பையனை தூக்கிச் சென்றார். துங்கு அஜிசா அன்பை வெளிப்படுத்தும் விதமாக   கூட்டத்தை நோக்கி முத்தம் கொடுப்பது போல் சைகை செய்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.