ALAM SEKITAR & CUACA

ரானாவ் நகரை லேசான நிலநடுக்கம் உலுக்கியது

31 ஆகஸ்ட் 2023, 5:02 AM
ரானாவ் நகரை லேசான நிலநடுக்கம் உலுக்கியது

கோத்தா கினபாலு, ஆக 31- ரிக்டர் அளவில் 3.7 எனப் பதிவான லேசான நிலநடுக்கம் ரானாவ் நகரில் இன்று காலை 7.13 மணியளவில் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் வடக்கே 6.1 பாகை மற்றும் கிழக்கே 116.6 பாகையில் ரானாவின் வடமேற்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில்  மையமிட்டிருந்தது என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ரானாவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

பாதிக்கப்பட்ட இடத்தில் நாங்கள் நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருகிறோம் என்று அத்துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.