கோலாலம்பூர், ஆக 27 - பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2023 ஆம் ஆண்டு தேசிய தினப் பேருரை வரும் 30ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தின் (பி.ஐ.சி.சி.) ப்ளெனரி அரங்கில் நடைபெறும்.
மலேசியர்கள் நாட்டுப்பற்றையும் சுதந்திரத்தையும் போற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி தெரிவித்தார்.
மலேசியா மடாணி கோட்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அனைவரையும் ஒன்றிணைக்கும் என்று நம்புகிறோம் என்று அவர் நேற்று முகநூல் வழி வெளியிட்ட காணொளியில் கூறினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களைக் கேட்டுக் கொண்ட முகமது ஸூக்கி, இந்நிகழ்வு உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றார்.
- பெர்னாமா








