NATIONAL

பளு தூக்கும்( பவர் லிஃப்டிங்) உலக சாம்பியன்ஷிப் போட்டியில் போனி புன்யாவ் வெற்றி

25 ஆகஸ்ட் 2023, 4:20 AM
பளு தூக்கும்(  பவர் லிஃப்டிங்)  உலக சாம்பியன்ஷிப் போட்டியில் போனி புன்யாவ் வெற்றி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25: தேசியப்( பவர் லிஃப்டிங்) பளுதூக்கும் சாம்பியனான போனி புன்யாவ் கஸ்டின் வியாழக்கிழமை துபாயில் நடந்த பாரா பவர் லிஃப்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (72 கிலோ மேல்) ஆண்கள் பிரிவில் தனது சொந்த உலக சாதனையை முறியடித்து தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சரவாக்கில் பிறந்த போனி தனது மூன்றாவது முயற்சியில் 231 கிலோ எடையைத் தூக்கி, ஜூன் 2021 இல் நடந்த 11வது ஃபாஸா துபாய் பவர்லிஃப்டிங் உலகக் கோப்பையில் தனது முந்தைய சாதனையான 230 கிலோவை முறியடித்தார்.

அப்போட்டியில் 202 கிலோ எடையைத் தூக்கி இத்தாலியைச் சேர்ந்த டொனாடோ டெலெஸ்கா வெள்ளி பதக்கத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து, உஸ்பெகிஸ்தான் பிரதிநிதி பெக்சோட் ஜமிலோவ் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி நிறைவடையும்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.