NATIONAL

போஸ் மலேசியாவின் நிகர இழப்பு இரண்டாம் காலாண்டில் 2.7 கோடி வெள்ளியாக அதிகரிப்பு

24 ஆகஸ்ட் 2023, 2:38 AM
போஸ் மலேசியாவின் நிகர இழப்பு இரண்டாம் காலாண்டில் 2.7 கோடி வெள்ளியாக அதிகரிப்பு

கோலாலம்பூர், ஆக 24- இவ்வாண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன்

முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் போஸ் மலேசியா நிறுவனத்தின்

நிகர இழப்பு 2 கோடியே 70 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளியாக

அதிகரித்துள்ளது. கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின்

இழப்பு 52 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியாக மட்டும் இருந்தது என்பது

குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022 இரண்டாம் காலாண்டில் 51 கோடியே 72 லட்சத்து 60 ஆயிரம்

வெள்ளியாக இருந்த அந்நிறுவனத்தின் வருமானம் இவ்வாண்டின் அதே

காலக்கட்டத்தில் 46 கோடியே 52 லட்சம் வெள்ளியாக குறைந்தது.

இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில்

தபால் பிரிவின் வருமானம் 16 விழுக்காடு வீழ்ச்சி கண்டதாக மலேசிய

பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கையில் போஸ் மலேசியா

கூறியுள்ளது.

இது தவிர, ஒப்பந்த வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும்

பார்சல்களின் அளவும் குறைந்த காரணத்தால் கூரியர் எனப்படும் துரித

பட்டுவாடா துறையும் வீழ்ச்சி கண்டது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்காலக்கட்டத்தில் சரக்கு பட்டுவாடா பிரிவு 7.0 விழுக்காடு வளர்ச்சி

கண்டு 16 கோடியே 94 லட்சம் வெள்ளியை வருமானமாகப் பெற்றது.

மின்-வர்த்தகத் துறையினர் தங்களின் சுய விநியோக ஆற்றலை

வலுப்படுத்தியது மற்றும் துரித பட்டுவாடா துறையில் அதிக சந்தை

வாய்ப்புகளைக் கைப்பற்றுவதற்கு அனைத்துலக நிறுவனங்கள் ஊடுருவல்

வியூகங்களைக் கடைபிடித்தது ஆகியவை போஸ் மலேசியாவின் இந்த

வருமான வீழ்ச்சிக்கு காரணமாக விளங்குகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.