NATIONAL

புதிய சட்டமன்ற சபாநாயகர் மலேசியத் தினத்திற்குப் பிறகு நியமிக்கப்படுவார்

22 ஆகஸ்ட் 2023, 8:29 AM
புதிய சட்டமன்ற சபாநாயகர் மலேசியத் தினத்திற்குப் பிறகு நியமிக்கப்படுவார்

ஷா ஆலம், ஆக 22 - புதிய சிலாங்கூர்

சபாநாயகர் பற்றிய அறிவிப்பு மலேசியா

தினத்திற்குப் பிறகு சட்ட மன்றத்தின்

முதலாவது கூட்டத் தொடரின்போது

அறிவிக்கப்படும்.

இந்த நியமனம் மாநில சட்டசபையின் முதல்

நாளில் அல்லது பிரதான கூட்டத்திற்கு

முன்னதாக நடைபெறவுள்ள சிறப்பு அமர்வின்

போதும் நடைபெறும் என்று மந்திரி பெசார்

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மலேசியா தினத்திற்குப் பிறகு இந்த

நடைமுறை மேற்கொள்ளப்படும்.

அப்போதுதான் மாநில சட்டமன்றம்

கூட்டப்பட உள்ளது என்று அவர்

குறிப்பிட்டார்.

மந்திரி பெசார் பணியை இன்று தொடங்கியப்

பின்னர் மாநில அரசு தலைமைச்

செயலகத்தில் அரசு ஊழியர்களிடம் தனது

தொடக்க உரையை நிகழ்த்தியப் பிறகு

செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக்

கூறினார்.

எனினும், சபாநாயகர் பதவிக்கான

வேட்பாளரின் பெயர்களை அமிருடின்

வெளியிடவில்லை. முன்னாள் பந்திங்

சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சானை

ஜசெக இந்தப் பதவிக்கு முன்மொழிந்ததாக

முன்னர் தெரிவிக்கப்பட்டது.

டுசுன் துவா தொகுதியை பாரிசான்

நேஷனலுக்கு விட்டுக் கொடுக்க ஜசெக

ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அதற்கு

மாற்றாக சட்டமன்ற உறுப்பினர் அல்லாத

ஒருவரை சபாநாயகராக நியமிக்க பக்கத்தான்

ஒப்புக்கொண்டது.

கடந்த முறை மாநில சபாநாயகராகப்

பணியாற்றிய சிகிஞ்சான் சட்டமன்ற

உறுப்பினர் இங் சுயி லிம், பதவியை

ராஜினாமா செய்து இப்போது மாநில

ஆட்சிக்குழு உறுப்பினராக உள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.