NATIONAL

மலேசியக் கபடி சங்கத்திற்கு அமைச்சர் சிவகுமார் 20,000 வெள்ளி மானியம்

22 ஆகஸ்ட் 2023, 8:12 AM
மலேசியக் கபடி சங்கத்திற்கு அமைச்சர் சிவகுமார் 20,000 வெள்ளி மானியம்

புத்ரா ஜெயா ஆக 22-

பல்வேறு அனைத்துலகக் கபடி

போட்டிகளில் பங்கேற்கும்

மலேசியக் கபடி சங்கத்திற்கு

உதவும் வகையில் மனிதவள

அமைச்சர் வ சிவகுமார் இன்று

20,000 வெள்ளி மானியம்

வழங்கினார்.

இன்று புத்ரா ஜெயா மனித

வள அமைச்சில் நடைபெற்ற

நிகழ்வில் 20,000

வெள்ளிக்கான காசோலையை

மலேசிய கபடி சங்கத்தின்

தலைவர் சதாசிவத்திடம்

அமைச்சர் சிவகுமார்

வழங்கினார்.

வரும் 2024 ஆம் ஆண்டு

சரவாக் சுக்மா போட்டியில்

சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறுவதற்குப் பெரும் உதவி

புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமாருக்குச்

சதாசிவம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பல ஆண்டுகால

போராட்டத்திற்குப் பிறகு சுக்மா

போட்டியில் சிலம்பம் மற்றும்

கபடி இடம் பெற்றுள்ளது

பெரும் மகிழ்ச்சியாகும் என்று

அவர் சொன்னார்.

இதனிடையே இந்திய

ஹைதராபாத்தில் நடைபெறும்

கபடி போட்டியில் மலேசியக் கபடி

குழு பங்கேற்கிறது என்று

சதாசிவம் தெரிவித்தார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.