NATIONAL

சிலாங்கூர் ஹாக்கி அணி திறமையான விளையாட்டாளர்களைத் தேடுகிறது – சுக்மா 2024

22 ஆகஸ்ட் 2023, 4:02 AM
சிலாங்கூர் ஹாக்கி அணி திறமையான விளையாட்டாளர்களைத் தேடுகிறது – சுக்மா 2024

ஷா ஆலம், ஆகஸ்ட் 22: அடுத்த ஆண்டு சரவாக்கில் நடைபெறவுள்ள மலேசியா விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த புதிய திறமையான விளையாட்டாளர்களைச் சிலாங்கூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி தேடுகிறது.

16 முதல் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளில் தேடுதல் நடத்தப்படுவதாக விளையாட்டு சங்கம் அறிவித்தது. இதில் சிலாங்கூரில் பிறந்த வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

"சிலாங்கூர் ஹாக்கி சங்கம், சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சிலுடன் இணைந்து 20 வயதுக்குட்பட்ட திறமையான  புதிய விளை

யாட்டாளர்களைத் (ஆண்கள் மற்றும் பெண்கள்) தேர்வு  செய்கிறது.

"ஆர்வமுள்ள சகோதர சகோதரிகளே வாருங்கள். சுக்மா  2024 விளையாட்டில் சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதிப்பதற்கான வாய்ப்பை நழுவ விடாதீர்கள்," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆர்வமுள்ளவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSczU3JPMxGPR727pZMkUUfAEaW76weu_xxuxpkyRcMWaITF3w/viewform?usp=sf31link என்ற இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் முழுமையான தனிப்பட்ட தகவல்களை ஆகஸ்ட் 31க்குள் நிரப்பலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.