ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் உள்ள 7 மாவட்டங்களில் இன்று மாலை கனமழை எச்சரிக்கை

21 ஆகஸ்ட் 2023, 8:24 AM
சிலாங்கூரில் உள்ள 7 மாவட்டங்களில் இன்று மாலை  கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், ஆகஸ்ட் 21: சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று மாலை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கோலா சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும்   சிப்பாங் ஆகிய  மாவட்டங்களில் கனமழை பொழியும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

அதே வானிலை கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் நெகிரி செம்பிலான், பகாங், ஜோகூர் மற்றும் சபா ஆகிய இடங்களிலும்  இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும். மேல் விபரங்களுக்கு பொதுமக்கள்   http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் வலம் வருங்கள்..

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.