ECONOMY

தளவாடப் பொருள் தயாரிப்புத் தொழிற்சாலைகள் தீயில் நாசம்- சுங்கை பூலோவில் சம்பவம்

21 ஆகஸ்ட் 2023, 4:48 AM
தளவாடப் பொருள் தயாரிப்புத் தொழிற்சாலைகள் தீயில் நாசம்- சுங்கை பூலோவில் சம்பவம்

கோலாலம்பூர், ஆக 21- இங்குள்ள கம்போங் பாரு சுங்கை பூலோவில் செயல்பட்டு வந்த ஆறு  வீட்டுத் தளவாடப் பொருள் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் தமது  துறைக்கு நேற்று  மாலை 4.48 மணிக்கு அவசர அழைப்பு  வந்ததாக  சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

தகவல் கிடைத்த 12 நிமிடங்களில் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்து  தொழிற்சாலைகளில் பரவிய தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.

சுங்கை பூலோ, செலாயாங் மற்றும் டாமன்சாரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச்  சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்  நடவடிக்கையில் ஈடுபட்டதாக வான்  ரசாலி குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.