ECONOMY

ரவாங், பண்டார் கன்றி ஹோம்ஸ் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு  அமைச்சர் சிவகுமார் வெ.30,000  மானியம்

19 ஆகஸ்ட் 2023, 10:50 AM
ரவாங், பண்டார் கன்றி ஹோம்ஸ் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு  அமைச்சர் சிவகுமார் வெ.30,000  மானியம்

புத்ரா ஜெயா ஆக 19- ரவாங் பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் வட்டாரத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு 30,000 வெள்ளி மானியத்தை மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் நேற்று நேரடியாக வழங்கினார்.

ஆலய நிர்வாகத்தின் தலைவர் தனராஜ் குப்புசாமி தலையில் பொறுப்பாளர்கள் இந்த மானியத்தை அமைச்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். ரவாங் கன்ட்ரி ஹோம்ஸ் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு உதவும் வகையில் 30,000 வெள்ளி வழங்கப்பட்டதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

வாக்குறுதி அளித்த படி 30,000 வெள்ளி மானியத்தை  வழங்கி பேருதவி புரிந்த அமைச்சர் சிவக்குமாருக்கு ஆலயத் தலைவர் தனராஜ் குப்புசாமி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.