ECONOMY

பூலாய், சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல்- வேட்பாளர்கள் பெயரை ஹராப்பான் புதன்கிழமை வெளியிடும்

19 ஆகஸ்ட் 2023, 6:04 AM
பூலாய், சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல்- வேட்பாளர்கள் பெயரை ஹராப்பான் புதன்கிழமை வெளியிடும்

ஜோகூர் பாரு, ஆக 19- வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெறவுள்ள சிப்பாங் பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களை பக்கத்தான் ஹராப்பன் வரும் புதன் கிழமை வெளியிடும்

இத்தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் புதியவர்கள் என்பதோடு உயர்கல்வியும் பெற்றவர்கள் என்று ஜோகூர் மாநில ஹராப்பான் துணைத் தலைவர் அமினுள்ஹூடா ஹசான் கூறினார்.

நேற்று இங்குள்ள அம்னோ தலைமையகத்தில் நடைபெற்ற பக்கத்தான் ஹாப்பான்- பாரிசான் நேஷனல் இடையிலான பிரத்தியேகச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இத்தேர்தல்களில் வெற்றியை உறுதி செய்வதற்கு ஏதுவாக ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் இயந்திரத்தை வலுப்படுத்துவதும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

அவ்விரு தொகுதிகளிலும் வரும் ஆகஸ்டு 26ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கலும் செப்டம்பர் 5ஆம் தேதி தொடக்க வாக்குப் பதிவும் செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.