NATIONAL

மலாய்க்காரர்கள் ஜசெகவை ஏற்றுக் கொண்டதை தேர்தலில் கட்சியின் அடைவு நிலை காட்டுகிறது

16 ஆகஸ்ட் 2023, 6:23 AM
மலாய்க்காரர்கள் ஜசெகவை ஏற்றுக் கொண்டதை தேர்தலில் கட்சியின் அடைவு நிலை காட்டுகிறது

புத்ராஜெயா, ஆக. 16- மாநிலத் தேர்தல்களில்

ஜசெகவின் சிறப்பான அடைவு நிலை, மலாய்

வாக்காளர்கள் அக்கட்சியை

ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது என்று

கட்சியின் துணைத் தலைவர் ஙா கோர் மிங்

கூறினார்.

நெகிரி செம்பிலான், பினாங்கு, சிலாங்கூர்

மற்றும் கெடாவில் ஜசெக போட்டியிட்ட 47

தொகுதிகளில் 46 இடங்களில் வெற்றி

பெற்றது.

இதற்கு முன் ஜசெக பல்வேறு போலிக்

கதைகளால் பாதிக்கப்பட்டது. ஆனால், மக்கள்

இப்போது கட்சியின் அர்ப்பணிப்பைக் காணத் தொடங்கி

விட்டனர். இது கட்சியின் மீது நேர்மறையான

வெளிச்சம் பட வைத்துள்ளது. 60

விழுக்காட்டு மலாய்க்காரர்களைக் கொண்ட

சிலாங்கூரின் சுங்கை பீலேக் தொகுதியில்

வென்றது இனிமையான வெற்றியாகும்

என்று கூறினார்.

புத்ராஜெயாவில் நேற்று ஊராட்சி மன்ற

அமைச்சின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறப்பு

விருது வழங்கும் விழாவின் முன்னோட்டத்தில்

கலந்து கொண்டப் பின்னர் ஊராட்சி மன்ற

மேம்பாட்டுத் துறை அமைச்சருமான அவர்

செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள

கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு

சரியான தடத்தில் செல்வதை இது காட்டுகிறது என்று அவர்

மேலும் குறிப்பிட்டார்

ஜசெக-அம்னோ கூட்டணி எட்டு மாதங்களாக

மட்டுமே உள்ளது என்பதை கருத்தில்

கொண்டு பார்க்கையில் இது ஒரு நல்ல

தொடக்கமாகும். ஒற்றுமை அரசாங்கம்

வலுவாகவும் நிலையானதாகவும் இருக்க

அவகாசம் கொடுங்கள் என்று அவர்

கூறினார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாநிலத்

தேர்தலில் ஜசெக 97.9 சதவீத வெற்றியைப்

பெற்றது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.