NATIONAL

சிலாங்கூர் எஃப்.சி. நெகிரி செம்பிலானை 4-0 கோல் கணக்கில் வீழ்த்தியது

15 ஆகஸ்ட் 2023, 3:01 AM
சிலாங்கூர் எஃப்.சி. நெகிரி செம்பிலானை 4-0 கோல் கணக்கில் வீழ்த்தியது

ஷா ஆலம், ஆக 15- பாரோய், துவாங்கு

அப்துல் ரஹ்மான் அரங்கில் நேற்றிரவு

நடைபெற்ற சூப்பர் லீக் ஆட்டத்தில்

சிலாங்கூர் எஃப்.சி. அணி 4-0 என்ற

கோல் கணக்கில் நெகிரி செம்பிலான்

எஃப்.சி. குழுவை வீழ்த்தியது.

போட்டியின் இரு பாதி ஆட்டங்களிலும்

முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ரெட் ஜெயண்ட்ஸ் எனும் சிலாங்கூர் அணி

ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டது.

பெனால்டி கட்டத்திற்கு வெளியிலிருந்து

ரிச்மண்ட் போக்கி உதைத்த வலுவான

பந்து நெகிரி கோல் காவலர் முகமது

ஃபிர்டாவுஸ் இர்மான் முகமது ஃபாடிலை

மீறி கோல் கம்பத்தில் புகுந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தை

பயிற்றுநர் டான் செங் ஹோவின்

விளையாட்டாளர்கள் முழுமையாக

பயன்படுத்திக் கொண்டனர். 58வது

நிமிடத்தில் அய்ரோன் டெல் வாலேவின்

மூலம் சிலாங்கூர் இரண்டாவது கோலை

பெற்றது என்று பெரித்தா ஹரியான் இணைய

ஊடகம் தெரிவிக்கிறது.

மூன்றாவது மற்றும் நான்காவது

கோல்கள் முறையே 74 வது நிமிடத்தில்

ஓரோஸ்கோ மற்றும் 83 வது நிமிடத்தில்

ஹரித் ஹைகல் ஆடாம் அப்கர் ஆகியோர்

மூலம் போடப்பட்டன.

இந்த வெற்றியின் மூலம் 49

புள்ளிகளைப் பெற்று லீக்

அட்டவணையில் இரண்டாவது இடத்தில்

உள்ள சிலாங்கூர் அணி தனது நிலையை

மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.